தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்; அதானி குழும பங்குகளின் மதிப்பு திடீர் உயர்வு!
இன்று அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளிலும் மிகப் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமம் தற்போது விவாதப் பொருளாக உள்ளது. சமீபத்தில், கௌதம் அதானி நாட்டின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர் ஆகியுள்ளார். புளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸின் படி, உலகப் பணக்காரர்களில் கௌதம் அதானி 11வது இடத்தில் உள்ளார். 2024 மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்புகளுக்குப் பிறகு, அதானி குழுமத்தைப் பற்றி இதுபோன்ற செய்திகள் வந்துள்ளன,
இன்று மும்பை மற்றும் டெல்லி பங்குச்சந்தைகளின் குறியீடுகளும் வலுவாக தொடங்கியுள்ளன. காலை 9.15 மணியளவில் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் உயர்வுடனும், நிஃப்டி 1000 புள்ளிகள் உயர்வுடனும் வர்த்தகத்தைத் தொடங்கின.
சந்தை ஏற்றத்துடன் அதானி குழுமத்தின் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. இன்று அதானி பவர் பங்குகள் 12 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் செய்யப்படுகிறது. பங்குகள் உயர்வுக்குப் பிறகு, அதானி குழுமத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
அதானி குழும பங்குகளின் நிலை:
- அதானி பவர் பங்குகள் இன்று காலை 9.15 மணிக்கு ஒரு பங்கு ரூ.864.30க்கு துவங்கியது. இதற்குப் பிறகு, பங்கு 12 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது மற்றும் ஒரு பங்கின் விலை ரூ.876.35 ஐ எட்டியது.
- அதே சமயம், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் ஒரு பங்குக்கு ரூ.3682.65-ல் தொடங்கப்பட்டு, பின்னர் 9 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.3,716.05ஐ எட்டியது.
- கௌதம் அதானியின் துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகளும் வேகமாக வர்த்தகமாகி வருகின்றன. இந்நிறுவனத்தின் பங்குகள் காலை 9.15 மணிக்கு ஒரு பங்கின் விலை ரூ.1534.25க்கு துவங்கியது. இதற்குப் பிறகு, நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.1,572.10 ஆனது.