For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திரையரங்குகளில் வசூல் வேட்டையாடிய 'மஞ்சும்மல் பாய்ஸ்'.. ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு!

09:05 AM Mar 27, 2024 IST | Web Editor
திரையரங்குகளில் வசூல் வேட்டையாடிய  மஞ்சும்மல் பாய்ஸ்    ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு
Advertisement

திரையரங்குகளில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடிய மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…’ சமூக வலைதளங்களில் தற்போது இந்த பாடல்தான் ட்ரெண்டிங். காரணம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம். மலையாளத்தில் வெளியாகி, கேரளாவை விட தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம்,  தமிழ்நாட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘மஞ்சும்மல்’ என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறது. அதில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் கதை.இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இது தமிழ் ரசிகர்களுடன் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கனெக்ட் ஆக பெரிதும் உதவியது. இதனால் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை பார்க்க இன்று வரை தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மலையாள சினிமாவில் அதிவிரைவில் ரூ.100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெற்றுள்ளது. உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் மலையாள படம் என்கிற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது.

திரையரங்கில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். இது கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement