Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மணிகண்டனின் ‘லவ்வர்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

08:33 PM Jan 13, 2024 IST | Web Editor
Advertisement

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்பட வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து சிலரது மனங்களையும் கவர்ந்தார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து,  ‘லவ்வர்’ திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், படம் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
#cinemaupdatesloverManikandanNews7Tamilnews7TamilUpdatesrelease dateVyaas
Advertisement
Next Article