For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது!

10:26 AM Dec 23, 2023 IST | Web Editor
சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி  ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது
Advertisement

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஊர்வலம் இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.

Advertisement

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது.  மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், ஐயப்பனுக்கு அணிவிக்கும் 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஊர்வலம் இன்று (டிச.23) ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்ட தங்க அங்கிக்கு பக்தர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை குழு - 16 பேர் கொண்ட குழுவை நியமித்த காங்கிரஸ்!

மேலும், தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 26 பிற்பகல் 1.30 மணிக்கு பம்பை வந்தடை உள்ளது. பின்னர் அங்கிருந்து தலை சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஐயப்பனுக்கு தங்க அங்கியை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்ய உள்ளனர். இதனைத்தொடர்ந்து, வரும் 27ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement