Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

07:33 AM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்
மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, கிருஷ்ணசாமி,
உள்ளிட்டோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக
நேற்று (30.08.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "மாஞ்சோலை தொழிலாளர்கள் பிபிடிசி நிறுவனத்தால் அங்கு
பணியமறுத்தப்பட்டவர்கள். அவர்களை பாரம்பரிய வனவாசிகளாக எவ்வாறு கருத முடியும்? தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைக்கான திட்டம் ஏதும் உள்ளதா? என் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், " அது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணசாமி, "நீண்ட காலமாக வனத்தில் வசிப்பவர்களை பாரம்பரிய வனவாசிகளாக
கருதலாம் என விதிகள் உள்ளது. ஆகவே, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்" என வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள், கிருஷ்ணசாமி தரப்பில் வனம் சம்பந்தமாக கோரிக்கை வைத்ததால் இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் ஏற்கனவே இந்த நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால நிவாரணம் தொடரும் எனவும் உத்தரவிட்டனர்.

Tags :
BBTCLBombay Burmah Trading Corporation LtdestateForest Departmentgreen tea gardensHigh courtKakkachiManjolaiManjolai workersNalumukkunews7 tamilNews7 Tamil UpdatesSingampattiZamintea estatesthirunelveliTNIE
Advertisement
Next Article