For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

04:22 PM Jan 10, 2024 IST | Web Editor
மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்  3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
Advertisement

3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பீகாரை சேர்ந்த மனநலச்  சீர் வேண்டும் நபர் சமூக சேவகர்களால் மீட்கப்பட்டு குணமாகி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்புகாரி.  இவருக்கு வயது 25.  இவர் 3 ஆண்டுக்கு முன் தன் மகன் இறந்த துக்கத்தில்  மனநலச் சீர்வேண்டும் நிலையில் காணாமல் போனார்.  இவர் கடந்த ஆண்டு 30.3.2023 நெல்லையில் உள்ள சோயா என்ற தன்னார்வ குழுவினரால் திருநெல்வேலி பேட்டை பகுதியில் மீட்கப்பட்டு மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

இவரது மனநிலையை கருத்தில் கொண்டு டவுண் கண்டியபேரியில் உள்ள ECRCக்கு மாற்றப்பட்டு சிகிச்சை மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டன.  படிப்படியாக குணமாகி அவர் தனது ஊரையும் குடும்பத்தைப் பற்றியும் கூற வீட்டை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.  அப்போது அஜித் பிரேம்ஜி,  APP ரமேஷ் உதவியுடன் வீட்டை கண்டுபிடித்து பெற்றோரிடம் பேசவைத்தனர்.

Imageஇந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உடனே வந்து  அவரை அழைத்து செல்லமுடியாமல் இருந்தனர்.  தற்போது அனைத்து செலவுகளும் செய்து அவரது தந்தையை வர வைத்து இன்று மாநகராட்சி ஆணையர் முன்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement