For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓடிடியில் வெளியானது ‘மழை பிடிக்காத மனிதன்’!

11:07 AM Aug 18, 2024 IST | Web Editor
ஓடிடியில் வெளியானது ‘மழை பிடிக்காத மனிதன்’
Advertisement

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

Advertisement

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

இதனையடுத்து, விஜய் ஆண்டனி நடித்த படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் டெண்ட்கொட்டா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement