Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் துறவியாக வீடு திரும்பிய நபர்!

10:52 AM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுவயதில் காணாமல் போன நபர் 22  ஆண்டுகளுக்கு பின் துறவியாக வீடு திரும்பி உள்ளார்.

Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலம்,  அமேதி மாவட்டத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் தனது
சிறுவயதில் காணாமல் போனார்.  இந்நிலையில்,  தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் துறவியாக இருந்து வீடு திரும்பினார்.  அந்த இளைஞர் கடந்த பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் ; தொடர் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் கைது!

இந்நிலையில், ஜனவரி 27 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோயிலுக்குச் சென்ற பிறகு அவர் தனது கிராமத்திற்கு வர முடிவு செய்தார்.  பின்னர், தனது கிராமத்திற்கு சென்றடைந்ததும்,  தனது மாமா மற்றும் அந்த கிராமத்தில் உள்ளவர்களிடமும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது,  அந்த நபர் தன்னை பற்றி கூறிய பின்னர், இவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.  மேலும், டெல்லியில் பணியாற்றிய அவரது தந்தை ரதிபாலுக்கு தகவல் தெரிவித்தனர்.  அந்த நபரின் வயிற்றில் காயம் இருந்ததை அடையாளம் கண்டறிந்த பின்னர், 22 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தனது மகனை ஏற்றுக்கொண்டார்.  அதனைத்தொடர்ந்து, அந்த நபர், இந்திய பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து ஒரு பாடலைப் பாடும் வீடியோ 'X' தளத்தில் பகிரப்பட்டது.

 

 

Tags :
#Home22 years agoamethiMANmissMonkreturnsuttar pradesh
Advertisement
Next Article