ஓடும் பைக்கில் #Pushups | மாஸ் காட்டிய இளைஞர் - தட்டித்தூக்கிய போலீஸ்!
ஓடும் பைக்கில் ஆபத்தான முறையில் புஷ்-அப்ஸ் மற்றும் நின்றுக் கொண்டே பயணம் செய்த இளைஞர்களை பீகார் காவல்துறை கைது செய்தனர்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பைக் சாகசத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தங்களது பைக் சாகசங்களின் வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர் விபத்துக்களிலும் உயிரிழக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் 15 வயதிற்கு மேல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என தகவல் தெரிவித்தனர். இதனால், பைக் சாகசத்தில் ஈடுவடுவோரை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்வது, அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே தற்போது வரை உள்ளது.
இதையும் படியுங்கள் : TVK முதல் மாநாடு குறித்து ஆலோசனை! பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு!
இந்நிலையில், பீகாரில் ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் நிரஜ் யாதவ் என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுக் கொண்டே ஒரு கிராமத்தின் வழியாக சென்றுள்ளார். இதனை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். இது தொடர்பான வீடியோ பதிவை அதிகமானோர் பகிர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் புஷ்-அப் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர், அந்த இளைஞர் பைக் சாகசம் செய்ததால், காவல்துறையினர் அவரை கைது செய்து, அறிவுறுத்தில் விடுவித்தனர். ஆனாலும், அந்த இளைஞர் பைக் சாகசம் செய்வதை நிறுத்தவில்லை. இந்நிலையில், இருவரையும் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர்.