Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு - 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

11:34 AM Jan 04, 2025 IST | Web Editor
Advertisement

உதகை அருகே குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும் குளிர் காரணமாக நேற்று முன்தினம் (ஜன. 02) இரவு வீட்டில் இருக்கும் அடுப்பில் நெருப்பு மூட்டியுள்ளார். அப்போது வீட்டில் அவருடைய மனைவி புவனா (28), மகள் தியாஸ்ரீ (4) மற்றும் உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் காலை வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது அனைவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் எமரால்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மயக்கத்தில் இருந்தவர்களை மீட்டு உதகை தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “வீட்டிற்குள் நெருப்பு மூட்டிய போது ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுத்திணறலால் மயக்கம் அடைந்துள்ளனர். மேலும் மூச்சுத்திணறலில் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
#HomecasecooldeathfirehospitallightingNilagiriootyPoliceSadnesstragic
Advertisement
Next Article