ஒற்றை கரப்பான் பூச்சியைக் கொல்லும் முயற்சியில் தன் வீட்டையே வெடிக்க வைத்த நபர்!...
ஒற்றை கரப்பான் பூச்சியைக் கொல்ல முயன்ற ஜப்பானியர் ஒருவர், அதிகப்படியான பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தியதால், அவரது வீடே வெடித்து சிதறியுள்ளது.
டிசம்பர் 10ஆம் தேதி நள்ளிரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஜப்பானில் உள்ள குமாமோட்டோ நகரில், அபார்ட்மெண்டில் கரப்பான் பூச்சியைக் கொல்ல வீட்டின் உரிமையாளரால், பெரிய அளவில் பூச்சிக்கொல்லியைத் தெளித்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக மின் இணைப்பின் அருகில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டு உரிமையாளர் சிரு காயங்களுடன் தப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியாகி , வேடிக்கையையும், அதே சமயம் விழிப்புணர்வையும் தூண்டியது. இந்த துயர நிகழ்விலும் ''கரப்பான் பூச்சி இறந்ததா?” , என இணைய வாசிகள் கேட்டு, கேலி செய்து வருகின்றனர்.