சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள வீரபத்திரன் கோயிலில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியில் வீரபத்திரன் கோயில் உள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்து கோயிலில் சிறப்பு
வழிபாடுகள், பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.
பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்த நிலையில், அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை சாமி சிலை மீது வீசி எறிந்தார். அது சாமி சிலை மீது பட்டு கீழே விழுந்து வெடித்ததை அடுத்து, பக்தர்கள் அங்குமிங்குமாக பதறியபடி ஓடினர்.
கோயிலில் இருந்த பூசாரி மற்றும் பொதுமக்கள் தப்பியோட முயன்ற பெட்ரோல் குண்டு
வீசிய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் பூசாரி மற்றும் பொதுமக்கள் காயமின்றி தப்பினர்.
இதையும் படியுங்கள்: சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!
மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (39) என்பதும், கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதியில் முந்திரி வியாபாரம் செய்து வருவதும், தொழிலில் நஷ்டம் காரணமாக வீரபத்திரன் சாமியிடம் எத்தனையோ முறை முறையிட்டும் சாமி தனக்கு எதுவும் செய்யாததால் ஆத்திரத்தில், மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்தார்.