For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வசூலை குவித்து வரும் மம்முட்டியின் "கண்ணூர் ஸ்குவாட்" - ரூ.100 கோடி வசூலித்து சாதனை..!

02:15 PM Nov 03, 2023 IST | Web Editor
வசூலை குவித்து வரும் மம்முட்டியின்  கண்ணூர் ஸ்குவாட்    ரூ 100 கோடி வசூலித்து சாதனை
Advertisement

வசூலை குவித்து வரும் மம்முட்டியின் "கண்ணூர் ஸ்குவாட்"  ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Advertisement

மலையாளத்தில் கடந்த செப்.28 ஆம் தேதி கண்ணூர் ஸ்குவாட் வெளியானது. இந்த  திரைப்படத்தை  ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் உருவாகியுள்ளதாக ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்து வருகிறது.

போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் போல வட மாநில குற்றவாளிகளை தேடிச் சென்று வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாக உருவாகி இருக்கிறது. படம் விறுவிறுப்பாக இருப்பதால் தற்போது பல திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீப காலமாக மலையாள திரையுலகில் வெளியான படங்கள் 100கோடிகளை கடந்து வசூலை குவித்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஷானே நிகாம் நடிப்பில் வெளியான ஆர்.டி.எக்ஸ் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மம்முட்டியில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படமும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
Advertisement