For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக களமிறங்கும் மம்தா பானர்ஜி?

02:09 PM Jun 22, 2024 IST | Web Editor
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக களமிறங்கும் மம்தா பானர்ஜி
Advertisement

வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்காக மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதன்மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார்.  வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில்,  அந்த தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம்,  பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.  இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரசாரம் சீதா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஜூன் 20 ஆம் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.  மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு கூட்டணி கைகூடாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement