வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மிசோரமில் வாக்களிக்காமல் முதலமைச்சர் திரும்பிச் சென்றார்.
- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும் ரூ. 500 மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதேபோல மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கியது. இந்த நிலையில் மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்ற அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நீண்டநேரம் காத்திருந்தார். இதன் பின்னரும் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.