இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்!
மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாலத்தீவுக்கு கோதுமை, அரிசி, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.இதனையடுத்து இந்தியாவுக்கு மாலத்தீவு அமைச்சர் மூசா ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு நாங்கள் மனதார நன்றி கூறுகிறோம். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை மாலத்தீவுகளில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு நன்றி என்றும்,
இந்தியாவின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே இரு நாட்டிற்கும் இடையேயான நீண்டகால நட்பைக் மேம்படுத்தும் ஓர் நல்ல முயற்சியாகும் என்றும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் சமுக வலைதள பக்க்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர் "வெல்கம் ஜமீர், இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு தான் முன்னுரிமை தருவோம், அதில் இந்தியா உறுதியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.