For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாலத்தீவை புறக்கணிக்க தொடங்கிய இந்திய சுற்றுலாப் பயணிகள்!

12:23 PM Jan 08, 2024 IST | Web Editor
மாலத்தீவை புறக்கணிக்க தொடங்கிய இந்திய சுற்றுலாப் பயணிகள்
Advertisement

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை 3 அமைச்சர்கள் தெரிவித்த நிலையில்,  இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் மாலத்தீவு அமைச்சர் பேசியதாக இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக ஊடகங்கள் முதல் ஆன்லைன் முன்பதிவு தளங்கள் வரை எல்லா இடங்களிலும் கோபத்தின் அலை தொடர்கிறது.  இதுவரை 10,500 ஹோட்டல் முன்பதிவுகளும், 5,520 விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் ரசிவாக இருக்கும் என கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு தான்,  மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜு, மாலத்தீவில் இந்திய ராணுவத்தின் இருப்பை எதிர்க்கும் நோக்கில் 'இந்தியா அவுட்' பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மற்றும் பயண முன்பதிவு தளங்களில் விரக்தியும் கோபமும் நிறைந்த கருத்துகள் மற்றும் மதிப்புரைகள் நிறைந்துள்ளன. பல இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி,  எதிர்காலத்தில் மாலத்தீவுக்குச் செல்லும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளனர்.

மாலத்தீவை விட லட்சத்தீவு சுற்றுலாவுக்கு சிறந்தது என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சத்தீவின் அழகிய படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.  மேலும் #BoycottMaldives ட்ரெண்டிங்கில் உள்ளது.  மாலத்தீவின் பொருளாதாரத்தின் கணிசமான பகுதியானது சுற்றுலாவைச் சார்ந்துள்ளது,  மேலும் இது வரும் ஆண்டுகளில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும்.

Advertisement