மலேசிய பிரதமர் #AnwarIbrahim பாடிய ஹிந்தி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்!
டெல்லி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாடல் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த 19ம் தேதி இரவு வந்தார். பிரதமராக அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் 20ம் தேதி பிரதமர் மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு , நட்புறவு, பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதையடுத்து, அன்வர் இப்ராஹிமின் வருகைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "பிரதமரான பிறகு, அன்வர் இப்ராஹிம் முதல் இந்தியா வருகை இது. எனது மூன்றாவது பதவிக்காலத்தில் அவருக்கு விருந்தளிப்பது எனக்குக் கிடைத்த பெருமை. கடந்த 2 ஆண்டுகளில், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஒத்துழைப்புடன், எங்களது இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது" இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident – உயிர் தப்பித்த 30 பயணிகள்!
டெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் பாலிவுட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு கலந்து கொண்டார். இந்த இசை நிகழ்ச்சியில் 1964 ஆம் ஆண்டு வெளியான 'சங்கம்' திரைப்படத்தில் இருந்து 'தோஸ்த் தோஸ்த் நா ரஹா' பாடலைப் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.