Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மலேசிய ஓபன் பேட்மிட்டன் | 2வது சுற்றில் இந்திய வீரர் பிரணாய் அதிர்ச்சித் தோல்வி!

08:43 PM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement

கோலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பேட்மிட்டன் 2வது சுற்றில் இந்திய வீரர் பிரணாய் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement

மலேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டி கோலாம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையைர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் - சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார். இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் முதல் செட்டில் லி ஷிஃபெங் எளிதாக வென்றார்.

பின்னர் 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார்.  வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரப்பரப்பாக நடைபெற்றது. வீரர்கள் இருவரும் தீவிரமாக ஆடி பாயிண்ட்ஸ்களை குவித்தனர். இறுதியில்  23-21 என்ற கணக்கில் லி ஷிஃபெங் வெற்றி பெற்றார்.

இதனால் லி ஷிஃப்பெங் 21-6, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் பிரணாய்-வை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதில், சீன வீரர் முதல் சுற்றில் இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவதை தோற்கடித்தார் என்பது குற்ப்பிடத்தக்கது.

Tags :
BatmintonHS PrannoyIndiaLi ShifengNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article