For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மால டம் டம்… மஞ்சர டம் டம்"… – 2024-ல் திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள்!

09:39 PM Dec 26, 2024 IST | Web Editor
 மால டம் டம்… மஞ்சர டம் டம் … – 2024 ல் திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள்
Advertisement

இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய தொகுப்பைக் காணலாம்.

Advertisement

ரகுல் பிரீத் சிங் - ஜாக்கி பக்னானி

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான 'கில்லி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு 'தடையற தாக்க' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர், இவர் அயலான், தேவ், என்.ஜி.கே, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரகுல் பிரீத் சிங் இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் நடைப்பெற்றது.

மீதா ரகுநாத்

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீதா ரகுனாத். இளைஞர்களிடம் இப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் நடித்திருந்தார். மீதா கடந்த மார்ச் மாதம் அவரது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துக் கொண்டார்.

அபர்னா தாஸ் - தீபக் பரம்பொல்

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நியான் பிரகாஷன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்னா தாஸ். இதை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட புகழ் தீபக் பரம்பொல்-ஐ திருமணம் செய்துக்கொண்டார்.

பிரேம்ஜி அமரன் - இந்து

பிரேம்ஜி இசை, பாடகர், நடிப்பு என பன்முகம் கொண்டவர். இவர் இந்தாண்டு வெளியான கோட் திரைப்படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பிரேம்ஜி கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

உமாபதி - ஐஸ்வர்யா

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. இவர் 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார். இவருக்கும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மெட்ரோ ஷிரிஷ் - ஹஸ்னா

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் ஹரிஸ். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மெட்ரோ ஷிரிஷ் கடந்த ஜூலை மாதம் ஹஸ்னா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

வரலட்சுமி சரத்குமார் - நிகோலை சச்தேவ்

தமிழ் சினிமாவில் பிரபலமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இவர் கடந்த ஜூலை மாதம் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிகோலை சச்தேவ்-ஐ திருமணம் செய்துக்கொண்டார்.

ஷாரிக் ஹாசன் - மரியா ஜெனிஃபர்

நடிகர்களான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்-இன் மகன் ஷாரிக் ஹாசன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடித்த பென்சில் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மரியா ஜெனிஃபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். பின்னர் என்னை நோக்கி பாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி, ஒரு பக்க கதை, ராதே, சபா நாயகன், வடக்குப்பட்டி ராமசாமி என தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்துக்கொண்டார். முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்.பி ஆன திருநாவுகரசரின் மகன் சாய் விஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் - அதிதி ஷங்கர்

'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகை அதிதி ராவை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

ரம்யா பாண்டியன் - லோவல் தவான்

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படத்தின் மூலம் அவரது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரம்யா பாண்டியன். பிக் பாஸ் 4 நிக்ழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் கடந்த நவம்பர் மாதம் லோவல் தவான் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

நாக சைத்தன்யா - சோபிதா

கடந்த 2009 ஆண்டு வெளியான ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நாக சைதன்யா. இவருக்கு நடிகை சமந்தாவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்ற நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து இந்தி நடிகையான ஷோபிதா துலிபாலா மீது காதல் கொண்ட நாக சைதன்யா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அவரை திருமணம் செய்துக்கொண்டார்.

காளிதாஸ் ஜெயராம் - மீரா

நடிகர்களான ஜெயராம் மற்றும் பார்வதியின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் மீன்குழம்பும் மண் பானையும், விக்ரம், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். காளிதாஸ் ஜெயராம் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தாரினி கலிங்கராயர் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். தாரினி ஒரு ஃபேஷன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான தேசிய விருதை வென்றார். பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அவரது நீண்ட கால காதலரான ஆண்டனி தட்டில்- ஐ திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

Advertisement