Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மக்களவை தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம்" - வைரலாகும் ராகுல் காந்தியின் பதிவு

01:33 PM Apr 10, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தலானது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது.  மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், மக்களவை தேர்தலானது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

“ மக்களவை தேர்தலானது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம். இந்தியாவின் ஒற்றுமைக்காக காங்கிரஸும்,  மறுபக்கம் மக்களை எப்போதும் பிளவுபடுத்த நினைப்பவர்களும் இருக்கின்றனர்.  நாட்டை பிளவுபடுத்துபவர்களின் பக்கம் நின்றவர்கள் யார்? நாட்டின் சுதந்திரத்திற்காகவும்,  ஒற்றுமைக்காகவும் நிற்பவர்களுடன் கைகோர்த்தது யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.  ஒத்துழையாமை இயக்கத்தின் போது பிரிட்டிஷ் அரசுடன் நின்றவர்கள் யார்? சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? என்பது நமக்கு தெரியும்.  அரசியலுக்காக பொய்களை அள்ளி வீசுவதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது.”

இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டார்.

Tags :
CongressElection2024Elections with News7 tamilElections2024Rahul gandhi
Advertisement
Next Article