For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எங்கள் கொள்கைகளை ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம்!” - மக்கள் நீதி மைய துணை தலைவர் பேட்டி..!

09:29 PM Jan 23, 2024 IST | Web Editor
“எங்கள் கொள்கைகளை ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம் ”   மக்கள் நீதி மைய துணை தலைவர் பேட்டி
Advertisement

எங்கள் கொள்கைகளோடு எந்த கட்சியும் ஒத்து போகாத பட்சத்தில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் துணை தலைவர் மௌரியா தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மைய கட்சி அலுவலகத்தில்
அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு
கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் துணை தலைவர் மௌரியா உள்ளிட்ட 30 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள் ; ராகுல்காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்‘ – அசாம் மாநிலத்தில் தடுத்து நிறுத்தம்!

அதனைத் தொடர்ந்து, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி அணுகுவது அதன் பின் அடுத்த சட்டமன்றத் தேர்தலை அணுகுவது உள்ளிட்டவை குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், செயற்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தில் துணைத் தலைவர் மௌரியா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மௌரியா பேசியதாவது:

மக்கள் நீதி மைய கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், செயற்குழு கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சி கொள்கைகளோடு எந்த கட்சியும் ஒத்து போகாத பட்சத்தில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறினார்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள்;

1. மக்கள் நீதி மையத்தில் 7 ஆம் ஆண்டு துவக்க விழா பிரம்மாண்ட அளவில் கொண்டாட
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2 .மக்கள் நீதி மைய கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி இறுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3. தற்போது இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு. மக்களுக்கு
உகந்த மக்கள் நீதி மையத்தின் கொள்கைக்கு ஒத்துவரக்கூடிய தேர்தல் வியூகங்களை
உருவாக்க தகுதிசால் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நிர்வாக குழுவிற்கு
அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

4. மக்கள் நீதி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு அணி உருவாக்கப்படும்.

5. மக்கள் நீதி மைய நிர்வாகிகள் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வாக்காளர் தினத்தை
முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே பிரச்சாரம் செய்ய
வேண்டும்.

6. காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மண்டல
வாரியாக மக்கள் நீதி மையத்தின் பேரிடர் குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement