For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

11:42 AM Jan 11, 2024 IST | Web Editor
 கேப்டன் மில்லர்  திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
Advertisement

 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ''கேப்டன் மில்லரின் பயணம்'' என்ற தலைப்பில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ்,  ஜான் கொக்கன் சுமேஷ்  மூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் மற்றும்  பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை!

அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து, கேப்டன் மில்லரின் பயணம் என்ற தலைப்பில் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் எக்ஸ் தளத்தில், பின்னணி இசையும் இசைக் கலப்பு (மிக்சிங்) பணியும் முடிந்தது. கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது. தனுஷுக்கான அறிமுக இசைக்குக் காத்திருங்கள்" என பதிவிட்டது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement