Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் - ஏராளமான பக்தர்கள் வருகை..!

07:59 AM Jan 15, 2024 IST | Web Editor
Advertisement

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்று மகரஜோதி தரிசனம் நடைபெறயுள்ளது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Advertisement

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், ஆண்டுதோறும் சாமி ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (ஜன.15) நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பக்தர்களை கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள் : “வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசு அயோத்தி ராமர் கோயில் கட்டியதை சாதனையாக காட்ட நினைக்கிறது!” – டி.ஆர்.பாலு

மண்டல பூஜையை தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக 2 நாட்களுக்கு பிறகு 30-ந் தேதி மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜையை போல மகர விளக்கு காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜைக்கான மகரஜோதி தரிசனம் இன்று (15.01.2024) மாலை நடைபெற உள்ளது.

மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மாலை 6.20 மணி அளவில் பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் தங்க திருவாபரணத்தை தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டு ஐய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags :
#darshanayyapanAYYAPAN KOVILdevoteesKeralaMakarajyothiSabarimala
Advertisement
Next Article