For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் - பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்!

07:14 PM Jan 15, 2024 IST | Web Editor
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம்   பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி பூஜையை ஒட்டி, மகர ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பக்தர்களை கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜையை தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக 2 நாட்களுக்கு பிறகு 30-ந் தேதி மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்கான மகரஜோதி தரிசனம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பொன்னம்பல மேட்டில் சரியாக 6.40 மணியளவில் சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளித்த மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 3 முறை மகர ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு கண்கொள்ளா கட்சியாக அமைந்தது. பக்தர்கள், சுவாமியே சரணம் ஐய்யப்பா எனும் சரண கோஷங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கோஷமிட்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில், சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிகைபுரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம், பமபை உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.

இன்று பந்தள அரச குடும்பத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆடை அணிகலன்களுடன் ராஜ அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் காட்சியளித்தார். ஜனவரி 20 வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். ஜனவரி 21-ம் தேதி பந்தள அரச குடும்பத்தின் தரிசனத்திற்கு பிறகு சபரிமலை சன்னிதானம் நடை சாத்தப்படும். பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரியில் நடை திறக்கப்படும்.

Tags :
Advertisement