For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் - எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

மூன்று ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி.
04:09 PM Jun 14, 2025 IST | Web Editor
மூன்று ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி.
மேஜர் லீக் கிரிக்கெட்   எம் ஐ  நியூயார்க் அணியை வீழ்த்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி
Advertisement

இந்தியாவைப் போலவே எம்.எல்.சி என அழைக்கப்படும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோதின.

Advertisement

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் டெவான் கான்வே 65 ரன் எடுத்தார். நியூயார்க் தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த எம்.ஐ.நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3 ரன் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. எம்.ஐ. நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக மோனங்க் படேல் 62 ரன் எடுத்தார். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஆடம் மில்னே 3 விக்கெட் வீழ்த்தினார்.

Tags :
Advertisement