இருளில் மூழ்கிய இந்தியாவின் முக்கிய நகரங்கள் - குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதே போல் பாகிஸ்தானும் இந்தியா மீது பல நடவடிக்கைகளை எடுத்தது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரித்து. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையை இன்று(மே.07) நடத்த கோரி மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
இதற்கிடையே இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 70 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதை இந்தியா மறுத்தது. ஒருபக்கம் போர் தொடங்கி உள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
இந்த நிலையில் பாதுகாப்பு ஒத்திகையின் தொடர்ச்சியாக டெல்லியில் தற்போது மின்தடை செய்து பாதுகாப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பாதுகாப்பு பயிற்சியில், டெல்லியின் அடையாளங்களாக கருதப்படும் கன்னாட் பிளேஸ், இந்தியா கேட், அக்ஷர்தாம் கோயில் ஆகிய பகுதிகல் சிறிது நேரம் இருளில் மூழ்கியது. அதே போல் மும்பை, பாட்னா, சூரத் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு பயிற்சிக்காக சிறிது நேரம் மின்தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்று வருவதால் இந்த நகரங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.