Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.5 கோடி பணம் கேட்டு மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் கொள்ளையர்கள் மிரட்டல்! -12 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு!

08:13 AM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் மஹிந்திரா கார் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹிசார் பகுதியில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமில் நேற்று 3 கொள்ளையர்கள் நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மஹிந்திரா கார் ஷோரூமுக்கு வந்ந 3 கொள்ளையர்கள் தங்களுக்கு 5 கோடி ரூபாய் தர வேண்டும் என கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கொள்ளையர்கள் கேட்ட தொகையை மஹிந்திரா கார் ஷோரூமில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் 12 முறை சுட்டு மிரட்டி உள்ளனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த  ஷோரூம் ஊழியர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கொள்ளையர்கள் குறித்து ஷோரூம் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.  2 நபர்கள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டும்,  மேலும் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் ஷோரூம் வெளியில் இருந்தகாக ஊழியர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : மீண்டும் தொடங்கிய ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு - சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் மாஸ் வீடியோ!

இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி, ரஜோரி கார்டனில் உள்ள பர்கர் கிங் கடையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஹிமான்ஷு பாவ் கும்பலுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மஹிந்திரா கார் ஷோரூமில் நடைபெற்ற துப்பாக்கி சுடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
haryanaHisarMahindra ShowroomPolicerobbers
Advertisement
Next Article