Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் #MahaVishnuக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி!

07:51 PM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அப்பள்ளியின் பார்வை மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர் சிட்னியில் இருந்து விசாரணைக்கு வருவதாக மஹா விஷ்ணு வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மகாவிஷ்ணு மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 7ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட மகாவிஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையும் படியுங்கள் : ‘வாழை’ #OTT ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

இந்நிலையில், மகாவிஷ்ணுவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு அளித்தனர். அந்த மனு மீதான விசாரணையும் அதே போல் மகாவிஷ்ணு ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று விசாரணைக்கு வந்தது. அதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மகாவிஷ்ணு அழைத்து வரப்பட்டார். ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை 4வது குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் அனுமதி வழங்கினார்.

Tags :
Ashok NagarcustodyGovt Girls HighSchoolMahavishnuNews7Tamilnews7TamilUpdatesPolice
Advertisement
Next Article