மகாராஷ்டிர மக்களவை தேர்தல் - வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்!
மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் வெங்காய ஏற்றுமதி தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று சில நாடுகளுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இந்த வெங்காய ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என மகாராஷ்டிரம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான வெங்காய வணிகர்கள் மற்றும் வியாபாரிகள், வெங்காய தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அவ்வாறு தடை நீக்கப்பட்டால், வெங்காய விவசாயிகளுக்கு விளைவிக்கப்படும் வெங்காயங்களுக்கு ஒருநல்ல விலை கிடைக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டித்தே வந்தது. இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது தேர்தல் நேரத்தில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
வெங்காய உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா. இந்த மகாராஷ்டிராவில் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதை கருத்தில்கொண்டு, அம்மாநில வெங்காய விவசாய விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் தற்போது வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை அடுத்து அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்.19 ஆம் தேதி நடைபெற்றது. அதனையடுத்து கடந்த ஏப். 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலின் போது 8 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து மூன்று மட்டும் நான்காம் கட்டத் தேர்தல்கள் மே7, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.