For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய் சேதுபதி நடிக்கும் 'மகாராஜா' | மாஸ் அப்டேட் கொடுத்த ’படக்குழு....

06:55 PM Apr 09, 2024 IST | Web Editor
விஜய் சேதுபதி நடிக்கும்  மகாராஜா     மாஸ் அப்டேட் கொடுத்த ’படக்குழு
Advertisement

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

கோலிவுட்டில் வெரைட்டியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, பான் இந்தியா அளவில் மாஸ் காட்டி வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ளன. இதில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. நிதிலன் இயக்கும் இந்தப் படம் மே 16ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நிதிலன், அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்தார். ஆக்‌ஷன் ஜானரில் பக்கா கமர்சியல் ஜானரில் உருவாகும் இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு தரமான கம்பேக் கொடுக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மகாராஜா படத்தின் ஃபைனல் வெர்ஷன் ரெடியாகிவிட்டதாகவும், அதனை படக்குழுவினரோடு சில பிரபலங்கள் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதன்படி ஒட்டுமொத்தமாக அனைவருமே மகாராஜா படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளனர். இதனால் விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம் சூப்பர் ஹிட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement