For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BiggBoss8 நிகழ்ச்சியில் மகாராஜா பட நடிகை?

06:44 PM Sep 23, 2024 IST | Web Editor
 biggboss8 நிகழ்ச்சியில் மகாராஜா பட நடிகை
Advertisement

பிக்பாஸ் சீசன் 8-ல் நடுவராக விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்களின் மிகவும் ஃபேவரைட்டான தமிழ் ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்க, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதன்முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் இந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் பார்வையாளர்கள் இருந்தனர். 1 முதல் 7வது சீசன் வரை சுவாரசியமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் கமல்ஹாசன்.

இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். பிக்பாஸ் என்றாலே கமல்ஹாசன் தான் என்ற எண்ணம் பார்வையாளர்கள் மத்தியில் பதிந்திருக்கும் நிலையில், கமல்ஹாசனுக்கு பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியது.

சரத்குமார், நயன்தாரா, விஜய் சேதுபதி என பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதியை விஜய் தொலைக்காட்சி தேர்வு செய்தது. இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் சேதுபதிதான் என்ற அதிகாரபூர்வ ப்ரோமோவும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாரளராக பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா தொடரில் அறியப்பட்ட நடிகர் அருண், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரும் போட்டியாளர்களாக இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளில்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

அக்டோபர் நெருங்கிவிட்ட நிலையில், பிக்பாஸ் சீசன் 8 எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பின் உச்சத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் நிகழ்ச்சி அக்டோபர் 6-ம் தேதி நிகழ்ச்சி ஒளிபரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் விஜய் சேதுபதி என்ன சமத்துவம் செய்யப்போகிறார், போட்டியாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் தற்போது 6ம் தேதிக்காக காத்திருக்கின்றனர்.

Tags :
Advertisement