மகா சிவராத்திரி - சிவாலயங்களில் திரண்ட பக்தர்கள் | இரவு முழுவதும் வழிபாடு!
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் இரவு முழுவதும் அபிஷேக ஆராதனை மற்றும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சிவன் கோயில்களில் விசேஷமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சிவன் கோயில்களில் சாமிக்கு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் - விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
நெல்லையில் இந்து சம்ய அறநிலைய துறை சார்பில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் கலைநிகழ்ச்சிகள், மங்கல இசை,சிவவாத்திய இசை, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், அன்மீக சொற்பொழிவு பரதன் என தமிழ்நாடு முழுவதும்
பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த பூமீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மாலை முதல் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டது.மேலும், உலக சாதனை
படைத்த செங்கல்பட்டை சேர்ந்த குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக
நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சிவாலயங்களான மயிலாப்பூர் கபாலீசுவரர், தஞ்சை
பிரகதீசுவரர், கோவை பட்டீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் மற்றும்
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோயில் ஆகிய 5 கோயில்களிலும் மகா
சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு சார்பில்
அறிவிக்கப்படு நடைபெற்ற நிலையில், நேற்று சிவராத்திரி விழாவை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோயில் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள தசரா விழா நடைபெற்றது.
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம்
நாகூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாகநாத சுவாமி கோயிலில்
சிவபெருமானுக்கு மஞ்சள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியம், சந்தனம் உள்ளிட்ட விஷேச பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் சிவனுக்கு பிடித்த பரதநாட்டிய நிகழ்ச்சியை நடந்த பள்ளி மாணவிகள் அரங்கேற்றம் செய்தனர். இதையடுத்து, வெளிப்பாளையம் அகத்தீஸ்வரர் ஆலயம், மலைஈஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட 12 சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று இரவு முழுவதும் சாமி தரிசனம் செய்தனர்.
திருத்துறைப்பூண்டியில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர் சன்னதி முன்பாக நிரந்தரமாக அமைக்கப்பட்ட மேடையில் பதினோராம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டியாஞ்சலி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து, பிரகதீஸ்வரர் சாமிக்கு பால்,தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட
16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இரவு கண் விழிக்காமல் இருப்பதற்காக வேண்டி பல்வேறு மாவட்டங்கள்,
நகரங்களிலிருந்து நாட்டியக் குழுவினர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி பக்தர்களை
வெகுவாக கவர்ந்தது. அரியலூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்
இருந்து 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு 27 ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூர், கோவை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். நேற்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.