For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'மகா சிவராத்திரி' - பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து !

மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
01:17 PM Feb 26, 2025 IST | Web Editor
 மகா சிவராத்திரி    பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து
Advertisement

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர்
நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும். அதே போல் வளர்ந்த இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தட்டும். ஹரஹர மகாதேவ்" என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "மகா சிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! சிவசக்தியின் ஆசிகள் எப்போதும் உங்கள் மீது நிலைத்திருக்கட்டும். ஹரஹர மகாதேவ்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement