Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாபநாசத்தில் 12 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்!

பாபநாசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
01:13 PM Sep 07, 2025 IST | Web Editor
பாபநாசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் படுகை புதுத்தெரு அரசலாற்றங்கரை அரச மரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ பால ஆஞ்சநேயர் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி முருகன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைப்பெற்றது.

Advertisement

தொடர்ந்து திருக்கயிலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், முருகன், வள்ளி, தெய்வானை, நரசிம்ம மூர்த்தி, மாரியம்மன் மற்றும் நவகிரகங்கள், 12 அடி உயர் அரசவேலன் முருகன் ஆகிய சுவாமிகளுக்கும் ராஜகோபுரத்தின் கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் பாபநாசம் படுகை புதுத்தெரு நாட்டாமைகள், கிராமவாசிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
festivalMaha KumbabhishekamMurugan statuepapanasamTempleThanjavur
Advertisement
Next Article