18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் திருவிழா!
10:29 AM Oct 26, 2023 IST | Web Editor
Advertisement
உசிலம்பட்டி அருகே 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் திருக்கோயில். இந்த கோயிலின் உற்சவ விழாவை எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து சாதி மத பேதமின்றி வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முத்தாலம்மன் திருக்கோயில் உற்சவ விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வு ஆத்தங்கரைப்பட்டி கண்மாய் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக எழுமலை முத்தாலம்மன் கோயிலிலிருந்து சப்பரத் தேரில் முத்தாலம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து வர, இதே போன்று ஆத்தங்கரைப்பட்டியில் உள்ள முத்தாலம்மன் சிலையை கண்மாய் கரைக்கு எடுத்து வந்து ஆத்தங்கரைப்பட்டி கண்மாய் அருகில் எதிர்சேவை நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வை காண மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி மத பேதமின்றி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சௌம்யா.மோ
Advertisement