மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: 6ம் நாளான இன்றைய நிகழ்வு என்ன?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆறாம் நாளான இன்று சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள் : இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை - தேர்தல் ஆணையம் உத்தரவு!
இந்த ஆண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 12-ம் தேதி சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதியும், வைகையில் அழகர் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23-ம் தேதியும் நடைபெற உள்ளது.
பின்னர், இரவு 7.30 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயில் இருந்து சுவாமியும், அம்மனும் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு மாசி வீதிகளில் திருவீதி உலா நிகழ்வு நடைபெற உள்ளது.