Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

10:10 AM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  குறிப்பாக, சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம் மற்றும் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நகரின் வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் புகழ் பெற்ற விழாவாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள் : ‘அசுரன்’ கன்னட ரீமேக்கில் நடிக்க ஆசை - நடிகர் சிவ்ராஜ்குமார் பேச்சு!

இந்த திருவிழா அன்று சுந்தரேசுவரர் - பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி, கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேல வெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர். 

 மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டும் இழுத்து வருவது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள்.

பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கையாக கொண்ட பொதுமக்கள் அரிசியை ஆர்வமுடன் சேகரித்து வழிபட்டு வருகின்றனர்.

Tags :
#darshanAshtami ChapparadevoteesMaduraimeenakshi amman temple
Advertisement
Next Article