For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

09:57 AM May 24, 2024 IST | Web Editor
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்   திரளான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி  திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Advertisement

108 வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் விளங்குகிறது.  இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 16-ந் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்,  வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.  தொடர்ந்து, 8-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.  இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

முன்னதாக தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி,  பூதேவியுடன் காலை 6 மணியளவில் எழுந்தருளினார்.  அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோஷங்கள் முழங்க காலை 6.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  தேரடியில் இருந்து கிளம்பிய தேர் பாண்டிய வேளாளர் தெரு,  தெற்கு  மாரட் வீதி,  திருப்பரங்குன்றம் சாலை,  நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு நேதாஜி ரோடு,  பெரியார் பேருந்து நிலையம், க்ரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.  இதனால் அந்த பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags :
Advertisement