Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை சித்திரை திருவிழா - ஏப்.12ல் கொடியேற்றம்!

08:38 PM Mar 13, 2024 IST | Web Editor
Advertisement

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வாஸ்து சாந்தியுடன் ஏப்.11 ஆம் தேதி தொடங்கி ஏப். 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 20 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 21 ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

ஏப். 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஏப்.23 ஆம் தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைவபம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
சித்திரை திருவிழாBakthifestivalMaduraimeenakshi amman temple
Advertisement
Next Article