மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்!
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிரந்திரம், தனியார் மையமாக்குதல் எத்ரிப்பு ஆகிய கோரிக்கிஅகளை முனவைத்து சில நாட்களுக்கு முன்பு ரிப்பன் கட்டிடம் முன்பு போராட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளிட்ட 10 அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி முதல் மதுரை தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியில் தனியார் மையத்தை ரத்து செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக 26,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் இப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 5 ஆவது நாளாக மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இடையே கடந்த சில நாட்களில் 10 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்றது. இதனையடுத்து திட்டமிட்டபடி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர் ஈடுபட்டு உள்ளனர்.