மதுரை | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 3ஆம் சுற்றில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ச்சி!
தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன. 14) அலங்காநல்லூரிலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) நடைபெறுகிறது. இதற்காக அலங்காநல்லூரில் வாடிவாசல் அமைத்தல், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் கடந்த சில நாள்களாக மேற்கொண்டனர்.
இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.
இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் சுற்றும் முடிவடைந்துள்ளது. இந்த சுற்றில் மொத்தம் 96 காளைகள் களம் இறக்கப்பட்டன. அதில் 17 காளைகள் பிடிபட்டன. இரண்டாம் சுற்றின் இறுதியில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற வீரர்கள் :
- ஜெயன் குமார், அவனியாபுரம் (R 145) - 3 காளைகள்
- சரவணக்குமார், ஊர்சேரி (R 120) - 3 காளைகள்
- அரவிந்த், செல்லூர் (R 144) - 2 காளைகள்
- விஜயன், அலங்காநல்லூர் (R 102) - 2 காளைகள்