Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 2ம் சுற்று முடிவு - இறுதி சுற்றுக்கு 5 பேர் தேர்ச்சி!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் சுற்று முடிவடைந்த நிலையில் அதன் விவரங்களை காண்போம்.
10:58 AM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன. 14) அலங்காநல்லூரிலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Advertisement

இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) நடைபெறுகிறது. இதற்காக அலங்காநல்லூரில் வாடிவாசல் அமைத்தல், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் கடந்த சில நாள்களாக மேற்கொண்டனர்.

இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.

முதல் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது  இரண்டாம் சுற்றும் முடிவடைந்துள்ளது. இந்த சுற்றில் மொத்தம் 101  காளைகள் களம் இறக்கப்பட்டன. அதில் 29 காளைகள் பிடிபட்டன. இரண்டாம் சுற்றின் இறுதியில் 5 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர். மேலும் இந்த இரண்டாம் சுற்றில் போலியான டோக்கன்களை பயன்படுத்திய  6 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டனர்.

அபி சித்தர்

இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற வீரர்கள் : 5 பேர்

  • அபி சித்தர், பூவந்தி (G 72) - 9 காளைகள்
  • விஜய், ஏனாதி (G 80) - 6 காளைகள்
  • விக்னேஷ், மடப்புரம் (G 66) - 4 காளைகள்
  • அருண்குமார், வாவிடைமருதூர் (G 91) - 4 காளைகள்
  • நல்லப்பா, சிவகங்கை (G 77) - 2 காளைகள்
Tags :
alanganallurJallikattuMaduraiPongal2025
Advertisement
Next Article