For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.... #Madurai விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி!

03:01 PM Sep 11, 2024 IST | Web Editor
தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி      madurai விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி
Advertisement

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement

எம்பிக்கள், வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு மட்டுமின்றி மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 6.55 மணிக்கு முதல் விமானமும் இரவு 9.25-க்கு கடைசி விமானமும் இயக்கப்பட்டு வருகின்றது. இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த தமிழ்நாடு தென்மாவட்ட எம்பிக்கள், மதுரை விமான நிலையத்தை முறைப்படி சர்வதேச நிலையமாக அறிவிக்கவும், இரவு நேரம் போக்குவரத்தை தொடங்கவும் ஆவணம் செய்ய கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, மதுரை வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் சுரேஷை செப்டம்பர் 1-ஆம் தேதி நேரில் சந்தித்த மதுரை வர்த்தக சங்கத்தினர் இதே கோரிக்கையை முன்வைத்தனர். மதுரை விமான நிலையம் 24 மணிநேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணைம் அனுமதி அளித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல்… #SandipGhosh குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

அதன்படி, வருகின்ற அக்டோபர் மாதம் முதல் இரவு நேரங்களில் மதுரை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்காக இண்டிகோ, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இரவு நேர விமானங்களின் நேரப் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கோரியுள்ளது.

Tags :
Advertisement