Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - சுற்றுசூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

10:24 AM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு,  சுற்றுசூழல் அனுமதிக் கோரி மருத்துவ நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. 

Advertisement

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.  45 மாதங்களுக்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என பிரதமர் தெரிவித்த நிலையில்,  அடுத்த மக்களவைத் தேர்தலே வரவிருக்கிறது.  ஆனால், அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில்,  தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.  இதில், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள்,  அவரச சிகிச்சை பிரிவு,  மருத்துவக் கல்லூரி,  நர்சிங் கல்லூரி,  மாணவ,  மாணவிகளுக்கான விடுதி,  பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளன.  இதற்காகவே சுற்றுசூழல் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
AIIMSEnvironmental ClearanceMaduraiNews7Tamilnews7TamilUpdatesPM ModiSEIAA
Advertisement
Next Article