For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தாலிக்கு தங்கம் திட்டம்" தொடர்பான வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு #MadrasHighCourt உத்தரவு!

02:43 PM Sep 13, 2024 IST | Web Editor
 தாலிக்கு தங்கம் திட்டம்  தொடர்பான வழக்கு   தமிழ்நாடு அரசுக்கு  madrashighcourt உத்தரவு
Advertisement

தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண
நிதியுதவி திட்டத்தில் கடந்த 2017-2021 வரை எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ.6 ஆயிரம் வருமானம் ஈட்டி, எனது பெண் குழந்தையை கல்லூரி வரை படிக்க வைத்தேன். என் மகளுக்கு திருமண செய்து வைப்பதற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தில் திருமண நிதியுதவி பெற கடந்த 2021ம் ஆண்டு விண்ணப்பித்தேன்.

அதை பரிசீலித்த அயனாவரம் வட்டாட்சியர், எனது ஆண்டு வருமானம் ரூ.72 -யை விட அதிகமாக இருப்பதாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்தார். அவர் எனது ஆண்டு வருமானத்தை தவறாக குறிப்பிட்டுள்ளார். அதனை திருத்தி இத்திட்டத்தில் தன்னுடைய மகள் திருமணத்திற்கு நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை செப்18 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Advertisement