Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கு - தள்ளுபடி செய்ததோடு அபராதமும் விதித்தது உயர்நீதிமன்றம்!

05:07 PM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  நீட்,  ஐஐடி,  போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளதால்,  தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ளது. தமிழ்நாடு மாணவர்களின் நலனை கருதி, மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற பயிற்று மொழியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழ்நாட்டில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி 2022ம் ஆண்டு இதே மனுதாரர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  அதே கோரிக்கையை வேறு விதமாக கூறி புதிய வழக்கு தாக்கல் செய்ததுடன்,  ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை மறைத்துள்ளதாகக் கூறி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags :
Madras High CourtNational Education PolicyPenaltytamil nadu
Advertisement
Next Article