Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் -விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

01:38 PM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

சிதம்பரம், நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழாவில், கனகசபை மீது பக்தர்கள் நின்று தரிசனம் தொடர்பாக விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சிதம்பரம், நடராஜர் கோயிலில், நாளை முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா
நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக்
அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : ‘இந்தியன் 2’படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைத்து! – மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து, கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த
தடையும் விதிக்கப்படாததால், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்
எனவும், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி
நடவடிக்கை எடுக்கலாம் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு
விண்ணப்பம் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என
அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
Ani Thirumanjanam ceremonyCharity departmentChidambaramdevoteesKanakasabhaMadras High CourtNataraja templeSami Darshan
Advertisement
Next Article