Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல்..!

06:56 AM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement

மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அக். 9 ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, நவம்பா் 7, 17, 25, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தோ்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே சத்தீஸ்கரிலும்  முதற்கட்டமாகவும், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.  மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்படவுள்ளது.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
assembly electionChattisgharElectionMadyapradesh
Advertisement
Next Article