Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் 'மதகஜராஜா' டிரெய்லர்!

09:59 PM Jan 07, 2025 IST | Web Editor
Advertisement

விஷால் நடித்துள்ள 'மதகஜராஜா' படத்தின் டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர் சண்டக்கோழி, தாமிரபரணி, துப்பறிவாளன், ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'.

இப்பட்த்தில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் மீண்டும் வெளியிட்டனர். இந்த டிரெய்லர் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் இப்படத்தில் விஷால் பாடியுள்ள 'My Dear Loveru' என்ற பாடலும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article